
விஜயின் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் நண்பன் படத்தின் மூன்று கட்டப்படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன.இப்படத்தின் நான்காம் கட்டப்படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார் சங்கர்.இப்படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருந்தது.விஜய் சங்கரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜய்க்காக சங்கர் இப்படப்பிடிப்பை தள்ளிப்போட்டுவிட்டார்.ஏனெனில் விஜய் வேலாயுதம் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ளார்.இது சென்னையில் படு வேகமாக நடைபெற்று வருகிறது.இதனாலே நண்பன் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நான்காம் படப்பிடிப்பில் சீறீகாந் ஜீவா இலியானா விஜய் ஆகியோர் பங்குபற்ற உள்ளனர்.சென்னையில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இடம்பெறும் அதில் தானும் பங்குபற்ற உள்ளதாக சீறீகாந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.மற்றும் இப்படத்தின் சில காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்தார் சங்கர்.அதில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.மற்றும் இன்னும் சில காட்சிகள் விஜய் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளை மே மாதம் 25 ம் திகதி ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டிருந்தார்.இதனை ஜீவாவும் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தார்.இதுவும் பிற்போடப்பட்டுள்ளது.வேலாயுதம் படம் முடிவடைந்தவுடன் நண்பன் படம் மிக விரைவாக வளரும்.
0 comments:
Post a Comment