
வேலாயுதம் படத்தின் முக்கியாமான செய்தி இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமகி விட்டது என்பதாகும். இப்படப்பிடிப்பு தொடங்கியவுடனே நாம் இச்செய்தியை அறியத்தந்தோம்.இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பை 20 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜா.அத்துடன் இப்படத்தின் போஸ்ட்புரடெக்சன் வேலைகளும் மிக சுறுசுறுப்பாக இடம்பெறத்தொடங்கி விட்டது.விஜய் பால்காரனாகவும் சூப்பர்மேனாகவும் வருகிறார்.அவரது காதல் தேவதைகளாக ஹன்சிகா ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர்.விஜயினது தங்கையாக நடிப்பவர் சரண்யா மோகன்.இவருக்கு படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகும்.தனது நடிப்பை முழுமையாக காட்டி உள்ளார் சரண்யா மோகன்.இப்படத்தின் இசை வெளியீடு மே மாதம் 24 ம் திகதி வெளியாகும் எனக்கூறப்படுகிறது.இப்பொழுது ரசிகர்களை குழம்ப வைக்கும் செய்தி வேலாயுதம் ஜெயம் ராஜாவின் சொந்தக்கதையா இல்லை அஸாத் படத்தின் ரீமேக்கா என்பதாகும்.ஆனால் ஜெயம் ராஜா கூறியுள்ளார் வேலாயுதம் என சொந்தக்கதை ஆகும்.அஸாத் படத்தின் ரீமேக் இல்லை என்றார்.
0 comments:
Post a Comment