Monday, May 16, 2011

வேலாயுதம் பரபரப்பு தொடங்கியது.


விஜயின் இந்த வருடத்தின் இரண்டாவது படமும் அதிகம் எதிர்பார்க்கும் படமுமாக காணப்படும் வேலாயுதம் படத்தின் ரெயிலர் ஜெயா ரீவியில் வெளியாகியதிலிருந்து இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.இப்படம் பற்றி ரசிகர்களின் மனதில் பல்வேறு அலைகள் மோதுகின்ற போதும் இப்படத்தை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படத்தின் ரெயிலர் வித்தியாசமாக அமைந்ததுடன் இப்படத்தின் ரெயிலருடன் வரும் டைட்டில் பாடல் அனைவரையும் ரசிக்க வைத்ததுடன் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்துள்ளது.26 செக்கன்கள் இடம்பெறும் இப்படத்தின் மூன்று ரெயிலரிலும் இடம்பெற்ற கட்டங்கள் மிக அருமையாக இருந்தது.விஜய் ஹன்சிகா ஜெனிலியா சரண்யா மோகன் ஆகியோர் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் காட்சியளித்தனர்.இதுவும் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
மற்றும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன.சிலர் ஜூன் அல்லது ஜூலை இப்படத்தின் ஆடியோ வெளியிடப்படலாம் என்கின்றனர்.எமக்கு கிடைத்த தகவலின் படி இப்படத்தின் ஆடியோ மே மாதம் 24 ம் திகதி  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது உறுதி செய்யப்பட்ட திகதியா இல்லையா என்பதை விரைவில் அறியத்தருவோம்.எப்பொழுதும் இணைந்திருங்கள்.

0 comments:

Post a Comment