Sunday, May 15, 2011

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகினார் இராம.நாராயணன் - தலைவரானார் எஸ்.ஏ.சந்திரசேகரன்


தமிழக தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைர் பதவியை இராம.நாராயணன் ராஜிநாமா செய்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் சொந்த அலுவல்கள் காரணமாக தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் இராம.நாராயணன் தலைமையில் செயற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள்களே சங்கத்தில் இருப்பதாகவும், முறையாக தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் கே.ஆர்.ஜி தலைமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் உள்ளிருப்பு போராட்டமொன்றையும் நடத்தினர்.
இதையடுத்து சட்ட பேரவை தேர்தலில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு. இதேவேளை தென்காசியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நடிகர்கள் ராதாரவி, செந்தில், விஜயகுமார், மயில்சாமி, நடிகைகள், மனோரமா, சத்யப்ரியா, குயிலி, சி.ஐ.டி. சகுந்தலா, புவனனேஸ்வரி, இயக்குனர் அமீர், கே.ஆர்., ஏ.எம்.ரத்னம், சேரன், பாபுராஜ், சித்ரா லட்சுமணன், முருகன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

பின்னர் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். பின்னர் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 205 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன் அதன்படியே நடத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஊழல், விலைவாசி உயர்வு, மின்சார தடை, அடிப்படை வசதி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளார். திரைப்படத்துறை சுந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு மவுனமாக உள்ளது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டும் இவ்வாறு சரத்குமார் கூறினார்.

0 comments:

Post a Comment