Friday, May 20, 2011

ஹன்சிகாவின் தரவரிசையில் முதலிடத்தில் வேலாயுதம்


தற்பொழுது தமிழ்சினிமாவில் புது வரவாக வந்திருக்கும் ஹன்சிகா தான் நடித்த படங்களில் சிறந்த தமிழ்ப்படம் வேலாயுதம் எனக்கூறியுள்ளார்.ஹன்சிகாவின் முதல்படம் தனுஷின் மாப்பிள்ளை இரண்டாவது படம் போக்கிரி இயக்குனர் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் ஆகும்.
அதிகளவான எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகிய மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என்பன பாக்ஸ் ஒபிஸில் கோட்டை விட்டுள்ளன.மிகப்பெரிய விளம்பரங்களுடன் படம் வெளிவந்தும் கைகொடுக்கவில்லை.ஆயினும் தமிழ்சினிமா ரசிகர் மத்தியில் ஹன்சிகா மோத்வானி பிரபலமாகி விட்டார்.ஹன்சிகாவின் அடுத்த படம் விஜயின் வேலாயுதம் ஆகும்.இப்படம் விஜயின் பிறந்த நாளன்று திரைக்கு வருகிறது.
அதிகளவான ரசிகர்களை தமிழகத்தில் கொண்டுள்ளவர் இளையதளபதி விஜய்.விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் மிக அதிக நம்பிக்கை வைத்துள்ளார் ஹன்சிகா.இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.ஜெயம் ராஜாவிம் முதலாவது சொந்த திரைக்கதையில் உருவாகும் படம் இதுவாகும்.வேலாயுதம் சூப்பர் ஹீரோ கதையை கொண்ட படமாகும்.விஜய் ஹன்சிகா சரண்யாமோகன் பாண்டியராஜன் சந்தானம் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

0 comments:

Post a Comment