'' 'ஹாரிஸ் இசை’க்காகப் படத்துக்கு ஓப்பனிங் கிடைக்குது. ஆனா, நீங்க நல்ல கதைகளைக் கவனிப்பது இல்லையோ?'' ''எந்தக் கதையில் நம்ம வேலை நல்லபடியா நிக்கும்னு மட்டும்தான் பார்ப்பேன். நல்லபாடல் களுக்கு நல்ல தளம் அமைச்சுக் கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை. முழு சினிமாவா திருப்தியா வெளிவரணுங்கிறது என் கையில் இல்லை. அதற்கு நான் எதுவும் செய்யவும் முடியாது. என்கிட்ட கதை சொல்றப்ப, ஒவ் வொண்ணும் அருமையாதான் இருக்கு. ஆனால், படமா எடுக்கும்போது அப்படியே வருதான்னு என்னால் வெளிப்படையா சொல்ல முடியாது!'' ''இதுவரைக்கும் கிராமத்து இசை பக்கம் நீங்கள் கவனம் பதிச்சதே இல்லையே?'' ''எனக்கும் ஆசைதான். ஆனா, அப்படியான ஸ்கிரிப்ட்டுடன் யாராவது வரணுமே! எனக்கு நல்ல கிராமிய இசையிலும் கிளாஸிக் மியூஸிக் கிலும் ஒரு படமாவது பண்ண ஆசை. 'தில்லானா மோகனாம்பாள்’ மாதிரி ஒரு படத்துக்கு இசை அமைக்கணும்னு ஆசை. 'சீவலப்பேரி பாண்டி’ யில் ஆதித்யனுக்குத் துணையா 'ஒயிலா பாடும் பாட்டில்...’ பாட்டுக்கு கீ-போர்டு வாசிச்சது இன்னமும் பசுமையா ஞாபகத்தில் இருக்கு!'' ''தமிழ் சினிமா ஹீரோக்கள்கூட இப்போ ஒற்றுமையா, ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. ஆனால், இசையமைப்பாளர் களிடம் அப்படி ஒரு ஒட்டுதல் இருக்கா?'' ''நான் மனசார மற்ற இசையமைப்பாளர் களைப் பாராட்டுவேன். அவங்களோட சிறந்த பாடல்களை 'நல்லா இருக்கு’ன்னு நான் எப்ப வும் பாராட்டிக்கிட்டேதான் இருக்கேன். இப்போ ஜி.வி.பிரகாஷின் 'யாத்தே யாத்தே...’ இசை என் மனசைத் தொட்டது. 'ஈரம்’ படத் தில் தமன் பண்ணினது எல்லாமே சூப்பர். யுவன்ஷங்கரை எப்பவும் குறைச்சு மதிப்பிடவே முடியாது. விஜய் ஆண்டனி 'அங்காடித் தெரு’ வுக்காகப் பண்ண 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாட்டை என்னை அறியாமல் பாடிட்டே இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் நம்ம கமென்ட்லாம் தாண்டி எங்கேயோ போயிட்டார். மத்த இசையமைப்பாளர்களை நேரில் பார்த்து நல்லாயிருக்குனு பாராட்டினால், அது நாலு சுவத்துக்குள்ளே அடங்கிரும். இப்படி உங்ககிட்டே பதிவு பண்ணினா, அது பல கோடி பேர்கிட்ட போகும். மத்தவங்களைப் பாராட்டப் பழகினால்தான் நாம வளருவோம். எனக்கு வளர்ந்துட்டே இருக்க ஆசை!'' ''ஜி.வி.பிரகாஷ் இந்திக்குப் போயிட்டார். உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லையா?'' ''இந்தியில் 'FORCE’னு ஒரு படம் பண்றேன். ஏ.ஆர்.முருகதாஸின் இந்திப் படத்துக்கும் நான்தான் இசை. ஆனால், பெர்சனலா எனக்குப் பிற மொழி மீது ஆர்வம் இல்லை. தமிழ் மொழியின் வசீகரம், அழகியல் இந்தியா வின் பிற மொழிகளில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இப்படிச் சொல்றதால, பிற மொழிகளைக் குறை சொல்றதா அர்த்தம் இல்லை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது போக, பிற மொழிகளில் செய்ய எனக்கு நேரமும் இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி இயக்குநர்களின் உறவு காரணமாகச் செய்கிற முயற்சிகள்தான் சில படங்கள். எனக்கு இசைன்னா... அது தமிழ் இசைதான்!'' ''உங்க காதல் கதையையே தனி சினிமாவா எடுக்கலாம்னு கேள்விப்பட்டோம்..?'' ''அட... ஆமாங்க! காதல் மனைவி சுமா. பெங்களூர்லதான் அவங்களை முதல்ல பார்த்தேன். என்கிட்ட முதல் ஆட்டோஃகிராப் வாங்கிய ரசிகை. கல்யாணத்துக்கு ஆரம்பத்தில் தடை இருந்தது. நான் கிறிஸ்டியன். அவங்க இந்து பிராமின். என் அன்புக்காக அவங்க எல்லா விதத்திலும் தன்னை மாத்திக்கிட்டாங்க. காதலின் அர்த்தம் விட்டுக்கொடுப் பது. அது எங்க விஷயத்தில் நடந்து இருக்கு. பையன் நிக்கோலஸ், இப்பவே பியானோவில் வெளுத்து வாங்குறான். பொண்ணு நிகிதா, படிப்பில் கெட்டி. அவங்களுக்கு இப்போ 'நங்காய்’ பாட்டுதான் ஃபேவரைட். என் காதல் பாடல்களில் ஏதோ விசேஷம் இருக்குன்னு சொல்வாங்களே... நம்ம காதல் அதில் கொஞ்சம் கலந்திருக்கும்... அதான் விசேஷம்!'' |
0 comments:
Post a Comment