Wednesday, May 18, 2011

இலியானா மருத்துவமனையில் அனுமதி


கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் நடிகை இலியானா சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழில் கேடி படத்தில் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
3 இடியட்ஸ் இந்தி படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் மொழிமாற்றம் செய்து வருகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் அந்தமானில் நடந்தது.
தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் 10 நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. ஓய்வின்றி இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment