Saturday, May 14, 2011

பரபரக்கும் வேலாயுதம் தகவல்கள்


விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம்.இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.இப்படம் பற்றி நாளொரு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இது பற்றி ரவிச்சந்திரன் கூறிய போது ரோஜாக்கூட்டம் உன்னாலே உன்னாலே பச்சைக்கிளிமுத்துச்சரம் தசாவதாரம் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து நான் தயாரிக்கும் படம் வேலாயுதம்.இது பிரமாண்டத்திற்கு குறைவில்லாத படம்.ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக அமைத்துள்ளோம்.இப்படத்தின் 80 வீதத்திற்கும் அதிகமான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.விஜயும் நானும் இணையும் முதல் படம் எனினும் விஜய் நடித்த காதலுக்குமரியாதை திரைப்படத்தை வெளியிட்டேன்.அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாய் அமைந்தது.அதை விட வெற்றிப்படமாக அமையும் இப்படம் என்றார்.கன்சிகா சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.ஜெனிலியா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க உள்ளன.இப்படத்தில் நடிக்கும் போது விஜய் நண்பன் படத்தில் நடிக்க சென்றார்.இப்பொழுது எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே நண்பன் பட படபிடிப்புக்கு சென்று விட்டார்.விஜயின் உதவியாளர் ஒரு நாள் எனக்கும் விஜய்க்கும் சண்டை என பத்திரிகையில் வந்த செய்தியை வேலாயுதம் படப்பிடிப்பில் காட்டினார்.இதனை பார்த்து விஜயும் ரவியும் நானும் சிரித்தோம்.அப்படி  நமக்குள் ஒன்றும் நடக்கவில்லை.யார் இப்படி வதந்திகளை பரவவிடுகிறார்கள் எனத்தெரியவில்லை.இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருப்பதால் படம் பாடல் வெளியீடு சம்பந்தமாக ஒன்றும் தெரிவிக்கவில்லை.ஆனால் விரைவில் அறியத்தருவோம் என்றார்.பாடல் வெளியீட்டை தசாவதாரம் பாடல் வெளியீட்டை விட சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் ரவி.

0 comments:

Post a Comment