Sunday, May 1, 2011

கலக்கும் வேலாயுதம்


விஜயின் வேலாயுதம் படத்தில் ஐந்து பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெறுகிறது.இதில் இன்னும் இரண்டு பாடல் படமாக்கபட உள்ளது என வேலாயுதம் குழு கூறுகின்றது.விஜயின் ஆரம்ப பாடலும் விஜய் ஹன்சிகாவின் இடம்பெறும் இரண்டு பாடல்களும் படம்பிடிக்கப்பட்டுள்ளது எனவும் இன்னும் இரண்டு பாடல் படமாக்கப்பட உள்ளது.இவ்விரண்டு பாடலும் ஐரோப்பாவில் விதம் விதமான லொகேசனில் படமாக்கப்பட உள்ளது.வேலாயுதம் படத்திற்கு விஜய் அன்டனி இசையமைக்கிறரர்.இப்படத்துக்குரிய பாடல்களை விவேகா அண்ணாமலை   திண்டுக்கல் சாரதி இயக்குனர் மற்றும் சிவ சண்முகம் ஆகியோர் எழுதியுள்ளனர்.இதில் அண்ணாமலை விஜய்க்காக என் உச்சி மண்டையில் பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.திண்டுக்கல் சாரதி  இயக்குனரும் அருமையான பாடல் வரிகளை எழுதிக்கொடுத்துள்ளார்.

விஜய் படம் என்றால் பாடல் எவ்வளவு பெரிய கைலைட்டோ அதனைப்போல் சண்டைக்காட்சிகளும்.இப்படத்தில் ஆறு சண்டைக்காட்சிகளாகும்.இதில் ஒரு சண்டைக்காட்சியை பிரமாண்டமாக கோலிவூட் சண்டை பயிற்சியாளரை கொண்டு படமாக்கியுள்ளனர்.ஏனைய ஐந்து சண்டைக்காட்சிகளை சிவா படமாக்க உள்ளார்.இவர் தற்பொழுது வேங்கை மங்காத்தா போன்ற படங்களிலும்  பணியாற்றுகின்றார்.இன்னும் ஒரு சண்டைக்காட்சி வேலாயுதம் படத்திற்காக படமாக்கப்படவேண்டி உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment