Friday, May 13, 2011

நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி-நடிகர் விஜய்


மக்கள் நினைத்தது போல,நான் நினைத்தது போல அதிமுக பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

திமுகவுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர்.

அதிமுக பெற்ற வெற்றி குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆட்சி மாற வேண்டும், ஒரு மாற்றம் வர வேண்டும் என நான் நினைத்தேன். அதேபோல மக்களும் நினைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.

அதிமுக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார் விஜய்.


முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு தேர்தல் வாக்குப்பதிவை முடித்துவிட்டு வெளியே வந்த போதும், ஆட்சி மாற்றமொன்று தமிழகத்தில் தேவை என அவர் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு பூரண ஆதரவு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலாயுதம் திரைப்படத்தை ஜெயா டீவி வாங்கக்கூடிய சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது. இன்று காலை முதல், ஜெயாடீவில் வேலாயுதம் படத்தின் ட்ரைலரும் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comments:

Any how she has won the election but she should implement her promised agendas.She is generally a person whom nobody can depend.She will change her words as per will.

Post a Comment