
மிகப்பிரமாண்டமாக படத்தை எடுத்து வருகிறார் ராஜா .படத்தின் கிளைமக்ஸ் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என வேலாயுதம் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஜெனிலியா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இப்படத்தின் பிரமாண்டம் தமிழ் சினிமாவை இன்னொரு பாதைக்கு கொண்டு செல்லும் என்கிறார் இப்படத்தின் சண்டைப்பாபயிற்சியாளர் டெல்மர்.
விஜய் இப்பொழுது கடுமையாக வேலாயுதம் படத்தில் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு இன்றுடன் மூன்றாவது நாளாக சென்னையில் இடம்பெறுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்கு அதிகளவான விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு இடம்பெறும் இடத்திற்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த ப்படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட்புரடெக்ஸன் வேலைகள் ஆரம்பமாகிவிடும்.வேலாயுதம் படத்தின் பாடல்களை விஜயின் பிறந்த நாளில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்பாடல் வெளியீடு பிரமாண்டமாக இடம்பெற உள்ளது.
0 comments:
Post a Comment