Wednesday, May 18, 2011

சங்கரை ரசிக்க வைத்த காமெடியன் சத்தியன்


சங்கரது இயக்கத்தை பார்த்து அதிகளவானோர் வியப்படைந்தனர்.அந்த சங்கரை தன்னுடைய காமெடியாலும் நடிப்பாலும் வியப்படைய வைத்துள்ளார் நடிகர் சத்தியன்.இவர் முழு நேர காமெடியானாக நடிக்கும் படம் நண்பனாகும்.
சத்தியன் ஒரு சிறந்த காமெடியன் ஆவார்.அதனை தான் நடித்த படங்களின் மூலம் நிரூபித்துள்ளார்.பல முன்னணி கீரோக்களுடனும் முன்னணி காமெடியன்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.தற்பொழுது நண்பன் படத்தின் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.இப்படம் ஹிந்தி சூப்பர் கிட் மூவியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காகும்.
சத்தியன் நண்பன் படத்தில் நடிக்கும் போது ஒரு சீனில் வித்தியாசமாக நடித்தை பார்த்து சங்கர் பாராட்டினாராம்.இது சங்கரையும் அந்தப்படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் கவர்ந்தது எனவும் கூறினார்.அவருடைய நடிப்புக்காக பல ஆலோசனைகளையும் மற்றும் பயிற்சியையும் சங்கர் வழங்கி படப்பிடிப்பை நடத்தினாராம்.

0 comments:

Post a Comment