தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.விஜயும் சந்திரசேகரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.ஜெயலலிதாவை வேலாயுதம் இசைவெளியீட்டு விழாவுக்கு வரும்படி நேற்றைய சந்திப்பில் கேட்டுக்கொண்டனர்.
ஜெயலலிதா வெற்றியின் பூரிப்பில் உள்ளார்.அத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் சம்பந்தமாக மிகவும் பரபரப்பாக இருப்பதால் தற்பொழுது விழாவை வைத்தால் இவ்விழாவில் கலந்து கொள்ளமுடியாத தன்மை காணப்படுகிறது.எனவே ஜெயலலிதாவின் வருகைக்காக வேலாயுதம் படத்தின் இசை வெளியீடு இரண்டு கிழமைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இப்படத்தின் இசை வெளியீட்டை இரு கிழமைக்கு தள்ளி வைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
வேலாயுதம் படத்தின் உத்தியோக பூர்வ ரெயிலர் நேற்று ஜெயா ரீவியில் தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பும் போது ஒளிபரப்பபட்டது.விஜயின் வேலாயுதம் படத்தை ஜெயா ரீவி வாங்கவுள்ளது.அதாவது படம் ஒளிபரப்பும் உரிமையை ஆகும்.இப்படம் விஜயின் காவலன் படம் போல் எந்தவிதமான பிரச்சினையையும் சந்திக்காமல் சிற்ப்பாக வெளியிடப்பட உள்ளது.நேற்று ரெயிலரில் கூறியது போல் வேலாயுதம் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு மிக வேகமாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

 













0 comments:
Post a Comment