Sunday, May 29, 2011

தமிழ்தலைப்பு வரிச்சலுகைக்கு வேட்டு


இந்த துறைதான் என்றில்லாமல் எல்லாதுறைகளிலும் ஏகபோகம் காட்டிவந்தது கலைஞர் குடும்பம். சினிமாவையோ மொத்தமாக பிடித்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தச்சூழ்நிலையில்தான் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா காப்பாற்றப்படும் என்று ஆசைப்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில்.
இப்படி ஆசைப்பட்ட அத்தனை பேரும் தேர்தல் முடிவுக்கு பின் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று விசாரித்தால் அப்படி சொல்லவும் முடியாது. சொல்லாமல் இருக்கவும் முடியாது என்று புலம்புகிறார்கள். காரணம் அவன், இவன், தெய்வத்திருமகள் மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட
யாருமில்லையாம்.
அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் விக்ரம் படத்தின் ஐந்து ஏரியாக்கள் விற்பனையாக வில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து இன்னும் சில தினங்களில் ஒரு அறிவிப்பு வரப்போகிறதாம் அரசு தரப்பில் இருந்து. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழில் தலைப்பு வைப்பதற்கு கொடுக்கப்பட்டு வந்த பதினைந்து சதவீத கேளிக்கை வரிச்சலுகையை ரத்து செய்து அறிவிப்பு விடப்போகிறதாம் அரசாங்கம்.
இன்னொரு பக்கம் தியேட்டரில் இதுவரை விதிக்கப்பட்டிருக்கும் நூறு, இருநூறு ரூபாய் டிக்கெட் கட்டணங்களை அதிரடியாக 40, 25 என அதிரடியாக குறைக்கப் போகிறாராம். இதனால் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிற நிலை ஏற்படுமா என்று இபோதைக்கு சொல்லமுடியாது என்றாலும், டிக்கெட் கட்டணம் குறைப்பதால் நடிகர்களின் சம்பளமும் குறையும் என்று நம்பலாம்.
அடுத்து திருட்டு விசிடி விஷயத்திலும் கடுமையான நடிவடிக்கை எடுக்கப் போகிறாராம் புதிய முதல்வர். பார்ப்பவர்களுக்கும் சரி, விற்பவர்களுக்கும் சரி. குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். 

0 comments:

Post a Comment