Monday, May 9, 2011

விஜயின் வேலாயுதம் எப்பொழுது?


விஜயின் அதிரடியான நடிப்பில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஜெயம் ராஜாவின் திரைக்கதையில் விரைவில் வெளிவர உள்ள படம் வேலாயுதம்.இத்திரைப்படம் போன வருடம் மிக கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.இந்த வருட சித்திரை மாதம் படத்தை வெளியிடுவது எனக்கூறி ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது.பின்னர் விஜய் காவலன் படத்தில் நடிக்க சென்றதால் படப்பிடிப்பு சில காலம் தாமதமானது.அதன் பின் மிக வேகமாக படப்பிடிப்பு நகர்வடைந்தது.இப்படத்தை விஜயின் பிறந்த நாளன்று ஜூன் மாதம் வெளியிடுவது எனக்கூறப்பட்டது.அத்திகதியில் படத்தை வெளியிடுவது என கூறி அப்படத்தை மிக வேகமாக நகர்த்தினர்.இப்பொழுது படத்தின் ஆடியோவை மே மாதம் வெளியிடத்திட்டமிட்டனர்.எனினும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாததால் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக வேலாயுதம் குழுவினர் கூறுகின்றனர்.இன்னும் படப்பிடிப்பு முழுமை பெறவில்லை.இப்பொழுது விஜய் ஐரோப்பிய நாடுகளில் நண்பன் படப்பிடிப்பில் உள்ளார்.நெதர்லாந்து சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.இப்படப்படப்பிடிப்பு முடியும் சமயத்தில் ஜெனிலியா மற்றும் வேலாயுதம் குழுவினர் ஐரோப்பா செல்லவுள்ளனர்.அங்கு இவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.படம் எப்பொழுது வெளியாகும் என வேலாயுதம் படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.பாடல் மற்றும் படம் எப்பொழுது வெளியாகும் என்ற  உத்தியோக பூர்வ அறிவிப்பு வந்தவுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

0 comments:

Post a Comment