சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமோடு உள்ளதாகவும், உடல்நிலையில் அவர் வெகுவாகத் தெறிவருவதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ரஜினிகாந் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக விடீயோகாட்சி செய்தியாளர்களுக்கு வழங்கப்பபடும் எனத் தெரிவிக்கபட்டிருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் ரஜினிகாந், உடல்நிலை வெகுவாகத் தேறிவருவதாகவும், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்புக்களுக்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வயிற்று கோளாறு, சுவாச பிரச்சனைக்காகவே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டு வருவதாகவும், உடல் உறுப்புகக்களின் செயல்பாட்டில் அனைத்தும் திருப்திகரமாக உள்ளதாகவும், அவற்றின் செயற்பாட்டுச் சமநிலையை கண்காணிக்கவே தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், திட்டமிட்டப்படி ராணா படப்பிடிப்பு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
ராணா படத்துக்காக தன்னை தயார்படுத்தி வந்தமையாலும், தொடர்ச்சியாக திரவ உணவுகளை சாப்பிட்டதனாலும், அவரது உடல் எடை குறைந்தது என்றும், இவ்வாறு உணவு பழக்கத்தை மாற்றியதுதான் அவரது உடலுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. அதனாலேதான் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் செய்திகளை, ராணா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முற்றறாக மறுத்துள்ளார். ராணா சரித்திர படம் எனவும், அதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிப்பதாகவும், சரித்திரப் படத்தில் மாவீரனாக தோன்ற உடலை யாராவது குறைப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் நலமாகவும், உற்சாகமாகவும், இருப்பதை ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் மருத்துவர் தணிகாசலமும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment