Wednesday, May 4, 2011

நண்பன் நான்காம் கட்டப்படப்பிடிப்பு விரைவில்


விஜய் இலியானா ஜீவா நடிக்க சங்கர் இயக்கும் படம் நண்பன்.இப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து அந்தமானில் முடிவடைந்துள்ளது.அடுத்த கட்டப்படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் மிகவேகமாக இடம்பெற உள்ளது.ஆனால் இன்னும் திகதி முடிவுசெய்யப்படவில்லை.பிரான்ஸ் லண்டன் சுவிசர்லாண்ட் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.விஜய் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளும் விஜய் இலியானா பங்குபெறும் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.
தற்பொழுது வேலாயுதம் படத்திற்காக லண்டன் சென்றுள்ள விஜய் இப்படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டபின் லண்டன் பறக்க உள்ளார்.
இப்பொழுது இடம்பெற உள்ளது பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள். ஜெனிலியா கன்சிகா இலியானா என மாறி மாறி ரொமான்சில் கலக்கவுள்ளார் விஜய்.

0 comments:

Post a Comment