Sunday, May 22, 2011

வேலாயுதம்

விஜய்க்கும் ஜெயம் ராஜாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரின் ரீமேக் படங்கள் அனைத்துமே வெற்றி தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'

'வேலாயுதம்' படமும் தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'ஆசாத்' படத்தின் ரீமேக் தான் என்று கூறி வருகிறார்கள். விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து இருக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் எப்படி சமுதாயத்தை மாற்றி அமைக்கிறான் என்பதே 'வேலாயுதம்' படத்தின் கதை. விஜய் இப்படத்தில் பால்காரனாகவும், ஜெனிலியா பத்திரிகை நிருபராகவும், ஹன்சிகா விஜய்க்கு காதலியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

ஜெனிலியா ஒரு சூப்பர் ஹீரோ இந்த ஊரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல,  அந்த நேரத்தில் விஜய்யும் ஊரை காப்பாற்ற தற்செயலாக சூப்பர் ஹீரோ ஆகிறாராம் விஜய்.

வேலாயுதம் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் என்று கூறி வருகிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.

வேலாயுதம் படம் தான் விஜய் நடித்து வெளிவரும் ரொம்ப காஸ்ட்லியான படம் என்கிறது தயாரிப்பு தரப்பு. 15 வில்லன்கள் 30 காமெடியன்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

"ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு கம்பெனியுடன் இணைந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும்" என்று கூறிகிறார் விஜய்.

0 comments:

Post a Comment