Wednesday, January 19, 2011

பொங்கலுக்கு வெளியான படங்களில் இலங்கையில் காவலன் வெற்றிபெற்றுள்ளது

பொங்கலுக்கு வெளியான படங்களில் இலங்கையில் காவலனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.உலகமெங்கும் வெற்றி நடை போடும் காவலன் இலங்கையில் வசூலை அள்ளி குவித்து வருகிறது.தியேட்டர்களில் எல்லாம் சனகூட்டத்துடன் வெற்றி நடைபோடுகிறது.இலங்கையில் 9 பிரதான திரையரங்குகளில் காவலன் திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது.இந்த 9 திரையரங்குகளில் ராஜா திரையரங்கில் ராஜா 1 , ராஜா 2 என இரு திரையரங்குகளிலும் கவுஸ்புல்லாக ஓடுகிறது.எனவே 10 திரையரங்கு என கணக்கிடலாம் காவலன் ஓடும் திரையரங்குகளை.காவலனை வாங்கி வெளியிட்ட அனைத்து திரையரங்கினரும் இலங்கையில் மகிழ்ச்சி களிப்பில் உள்ளனர்.இன்று 4 வது நாளாக ஓடும் காவலன் கண்டிப்பாக இலங்கை தியேட்டர்காரர்களுக்கு பெரிய லாபமாக அமைந்துள்ளது.எந்த விதமான இடையூறும் எதிர்ப்பும் இல்லாமல் இலங்கையில் வெற்றி நடைபோடுகிறது காவலன்.
இது வழமையாக விஜய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இப்பொங்கல் அன்று காவலன் வெளிவரும் என எண்ணி தூர இடங்களிலிருந்து வந்த ரசிகர்கள் படம் பொங்கலன்று வராத காரண்த்தால் சிறுத்தை ஆடுகளம் படத்திற்கு சென்றனர்.இப்பொழுது காவலன் படம் ரீலீஸ் ஆகியதால் காவலன் படத்துக்கு சனத்தொகை முட்டி மோதுகிறது.ஏனைய படங்களான சிறுத்தை   ஆடுகளம் ஆகியன சுமாராகவே ஓடுகின்றன.இவ் இரு திரைப்படங்களுக்கும் போகும் மக்களின் தொகை குறைவடைந்துள்ளது.
கலைஞரின் இளைஞன் இலங்கையில் எந்த தியேட்டரில் ஓடுகிறது என தெரியவில்லை.இப் படம் இலங்கையில் ஓடுகிறது என்பது இதுவரை சந்தேகமாகவே உள்ளது.இது இவ்வாறு இருக்க சன் பிக்சர்ஸின் ஆடுகளம் வெறும் 3 தியேட்டர்களில் மாத்திரமே ஓடுகிறது.இத்திரைப்படமும் இலங்கை ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற தோன்றுகிறது.
எனவே பொங்கலுக்கு வெளியான படங்களில் இலங்கையில் காவலன் வெற்றிபெற்றுள்ளது எனலாம்.

3 comments:

Post a Comment