Monday, January 31, 2011

காவலன் பாடல்கள் படத்தோடு ஒட்டி அமைந்துள்ளதா? இல்லை தேவையில்லாமல் சேர்கப்பட்டுள்ளதா?

காவலன் படத்தில் 5 பாடல்கள் காணப்படுகின்றன.இதில் வரும் விண்ணைக்காப்பான் ஒருவன் பாடல் முதலாவது பாடலாக இடம்பெறுகிறது.இப்பாடல் விஜய் முத்து ராமலிங்கம் குடும்பத்துடன் சேர்ந்த பிறகு விஜய் அவர்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது போல் இப்பாடல் இடம்பெறுகிறது.இப்பாடலில் ராமலிங்கம் குடும்பம் விஜய் என அனைவரும் பங்குபற்றுகின்றனர்.இப்பாடல் கும்பகோணத்தில் இடம் பெற்றுள்ளது.எனவே இப்பாடல் படத்தோடு ஒட்டியே அமைகிறது.
இரண்டாவது பாடல் ஸ்டெப் ஸ்டெப் இப்பாடல் அசின் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற அசினுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் பாடலாக அமைந்துள்ளது.அசினின் டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் பழக்கும் போது பெண்களுடன் தப்பா நடப்பதை கண்ட விஜய் தட்டிக்கேட்டு டான்ஸ் மாஸ்டரை துரத்தி விட்டு அசின் குறூப்புக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.இப்பாடலும் படத்துக்கு தேவையாகவே அமைந்துள்ளது.

செல்போன் காதலி விஜயை காதலிப்பதால் அக்காதலி யார் என தெரியாமல் அக்காதலியை தேடும் போது நடக்கும் சம்பவங்களை வெளிப்படுத்துவதாக யாரது யாரது பாடல் அமைந்துள்ளது.இப்பாடல் இயல்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் விஜய்க்கு அவள் மேல் இருக்கும் காதல் வெளிப்படுத்தப்படுகிறது.இருவரும் காதல் கொள்ளும் தன்மையுடன் இப்பாடல் அமைகிறது.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.

காதலி நேரில் சந்திக்க வரப்போவதை உணர்ந்த விஜயின் நாட்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை எடுத்துக்காட்ட அமைகிறது சட சட பாடல்.இது பாங்கொகில் சூட் பண்ணப்பட்டுள்ளது.இதன் இடையில் விஜய் செய்யும் அட்டகாசம் சிரிப்பலை.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.


அடுத்த பாடல் பட்டாம்பூச்சி பாடல் இது அசினின் நினைவு பாடலாக அமைகிறது.விஜய் படும் துன்பங்களை பார்த்த அசின் பரீட்சைக்கு கூட புள்ளி எடுத்தால் சந்திப்பேன் என்க்கூறியபின் விஜயின் சந்தோசத்தை பார்த்து கன்வு காண்பது போல் இப்பாடல் அமைந்துள்ளது.இவர்கள் அனைவரும் பரீட்சைக்கு படிக்கும் நாட்களை நகர்த்த இப்பாடல் இடம்பெறுகிறது.இதுவும் கதைஓட்டதோடு அமைந்துள்ளது.

இவ்வாறு காவலன் பாடல் அனைத்தும் கதை ஓட்டத்தோடு அமைந்துள்ளது.ஒரு பாடலும் இடைச்செருகலாக அமையவில்லை.ஏனைய படங்களை போல் காதலன் காதலியை சந்தித்தவுடன் ஒரு பாடல் என அமையாமல் கதையோட்டத்தோடு பாட்ல்கள் அமைந்துள்ளன.

0 comments:

Post a Comment