Tuesday, January 18, 2011

எமது பார்வையில் காவலன்-திரைவிமர்சனம்

எமது பார்வையில் காவலன் திரைவிமர்சனம்

முத்துராமலிங்கம் (ராஜ்கிரன்) இவரது மனைவி (ரோஜா) அவர்களுக்கு இரு பிள்ளைகள் மீரா(அசின்) மற்றும் ஒரு பையன் அசினின் நண்பியாக மது (மித்திரா) அம்மாவாசையாக (வடிவேலு).முத்துராமலிங்கம் ஊரிலே பெரிய ரவுடியாக இருந்து பின் திருந்தி நல்லவராக வாழ்கிறார்.ஆனால் இவரது மகனை ஒரு பெண் காதலித்து தன்னை அவர் திருமணம் செய்யாத காரணத்தால் இறந்து விடுகிறாள்.இவளது தந்தை ராஜ்கிரணை கொள்ள துடிக்கிறது.இதனை அறியாத பூமிநாதன் (விஜய்) குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டை ஒன்றும் போடாமல் விஜய் நல்ல மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக ராஜ்கிரனுக்கு ஆபத்து அவரை பாதுகாக்க காவலன் ஒருவன் தேவை எனக் கூறி விஜயை காவலனாக அனுப்புகிறது.விஜய் தனக்கு காவலனாக வேண்டாம் எனக்கூறும் ராஜ்கிரன் விஜய் வந்த காரணத்தை உணர்ந்து விஜய்ஜை காவலனாக சேர்கிறார்.இதன் பின்பு எதிரியால் ஆபத்து தனக்கு இல்லை தன் மகளுக்கு என அறியும் ராஜ்கிரன் விஜயை அசினுக்கு காவலனாக அனுப்புவதுடன் விஜயையும் படிக்க அனுப்புகிறார்.விஜய் காவலனாக காவல்காரர் போடும் உடுப்புக்களுடன் வர இதனை பிடிக்காத அசின் வேறு பெண்கதைப்பது போல் கதைத்து விஜயின் உடுப்புக்களை எல்லாம் மாற்ற வைக்கிறார்.தனது நண்பர் கொடுத்த ஐடியாவை வைத்து வேறு பெண் கதைப்பது போல் கதைத்து விஜயை காதல் கொள்ளவைகிறார் விஜயை காதல் கொள்ள வைப்பதுடன் தானும் விஜய் மேல் காதல் கொள்கிறார். ஏற்கன்வே நிச்சயதார்த்தம் முடிந்த பெண் அசின் இறுதியில் விஜய்யை மணந்தாரா? அசினை வில்லன் கூட்டணி கொன்றதா? ராஜ்கிரணுக்கு விஜய்  நம்பிக்கை துரோகம் செய்தாரா? அசினின் நண்பி என்ன ஆனார்? என இறுதிவரை நகர்கிறது கதை.

விஜயின் காவலனாக சேரவேண்டும் என வடிவேலு போடும் திட்டமும் அதன் பின்பு விஜயுடன் அடிக்கும் காமெடியும் கலக்கல்.படம் முழுவதும் நல்ல காமெடி மற்றும் செண்டிமென்ட்.ஒளிப்பதிவு கலை சண்டை பிரமாண்டம்.வித்தியாசாகரின் இசை பிண்ணணி இசை பாடல் பிரமாதம்.திரைக்கதை வசனம் கதை சூப்பர். எடிட்டிங் படத்தின் ஓட்டத்திற்கு சரியாக அமைந்துள்ளது.

அசின் விஜய் கெமிஸ்ரி பிரமாதமாக பொருந்தியுள்ளது.வடிவேலு விஜயின் காமெடியும் பிரமாதமாக பொருந்தியுள்ளது.விண்ணைக்காப்பான் ஒருவன் பட்டாம் பூச்சி பாடல்களின் வீடியோ காட்சி பிரமாண்டம் அத்துடன் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது யாரது யாரது பாடல் யாரும் எதிர்பாராத காட்சியமைப்பு.

தேவையற்ற  சண்டை காட்சிகளே வில்லனோ கதாபாத்திரங்களோ இல்லை.சரியான காதாப்பாத்திர தேர்வு சரியான காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை.படத்தின் முதல் பாதியில் வயிறு குழுங்க சிரிப்பும் இரண்டாவது பாதி மிகப்பிரமாதமான செண்டிமென்ட்.
மொத்தத்தில் காவலன் விஜய் ரசிகர்கள் மட்டும் அன்றி அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ற குடும்ப திரைப்படம்.

எனது கணிப்பில் 4.5/5

விமர்சனம்
கிஷோர்

0 comments:

Post a Comment