Thursday, January 20, 2011

முட்டும் காவலன், காணாமல் போகும் சிறுத்தை

முட்டும் காவலன், காணாமல் போகும் சிறுத்தை

உலகெங்கும் சூப்பர் ஹிட், இந்த ஆண்டின் மெகா ஹிட், மூவி ஆப் தி டிகேட், ஹாலிவுட்டுக்கு சவால் என்றெல்லாம் கலர் கலர் வார்த்தைகளுடன் தினமும் விளம்பரம் கொடுக்கப்படும் பொங்கல் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன?
‘இந்தப் படம் வசூலில் சூப்பர்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லா படங்களுமே ததிங்கினத்தோம் போடுகின்றன.
தற்போதைய நிலவரப்படி விஜய்யின் காவலனும், தனுஷின் ஆடுகளமும் மட்டுமே சற்று ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறுத்தை மற்றும் இளைஞன் பின்தங்கியுள்ளன. ஜனவரி 14-ம் தேதி தனுஷின் ஆடுகளம் மற்றும் புதிய இயக்குநர் சிவாவின் சிறுத்தை படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களில் ஆடுகளம் முதலிடத்தைப் பெற்றது.
அடுத்த நாள் விஜய்யின் காவலன் மற்றும் பா விஜய்யின் இளைஞன் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் என்பதால் ஓப்பனிங் நன்றாக இருந்தது. திரையிட்ட இடங்களில் ரசிகர் கூட்டம். வழக்கமான விஜய் படம் போல இல்லை என்ற வார்த்தை பரவவே படத்திற்கு ரெஸ்பான்ஸும் இருந்தது.
வசூலிலும் கூட மற்ற மூன்று படங்களையும் முந்தியது. இப்போது நான்கைந்து நாள்கள் முடிந்த நிலையில், தனுஷின் ஆடுகளத்துடன் முதலிடத்திற்குப் போட்டா போட்டியில் இறங்கியுள்ளது காவலன். ஆடுகளத்திற்கு வார இறுதிகளில் 90 சதவீதம் நிரம்பிய திரையரங்குகளில் இப்போது 40 முதல் 50 சதவீத பார்வையாளர்கள் உள்ளனர். ஆன்லைனில் எப்போதும் சுலபத்தில் கிடைக்கிறது இந்தப் படத்துக்கான டிக்கெட்.
இப்படி காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்.

0 comments:

Post a Comment