Sunday, January 23, 2011

சொதப்பும் கலைஞர் தொலைக்காட்சியின் படவரிசை பத்து

பொங்கலுக்கு வெளியான படங்களில் வசூலில் காவலன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.இதற்கு இணையதளங்கள் பல ஆதாரமாக உள்ளன.ஆனால் கலைஞர் தொலைக்காட்சியின் படவரிசையில் காவலனுக்கு  இந்த வாரம் 5 இடம் கொடுத்துள்ளது.முதலாம் இடத்தை  கொடுத்து தாம் வெளியிடும் படவரிசை 10 தவறானது என உலக தமிழருக்கு எடுத்து காட்டியுள்ளது.மன்மதன் அம்பு வசூல் சென்னையில் சென்றவாரம் 10 லட்சத்துக்கு குறைவாகவே காணப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை இதற்கு இணையத்தளம் ஆதாரமாக உள்ளது.அவர்களுடைய படவரிசை பத்தில் சிறப்பு திரைப்படமாக இளைஞன் இடம்பெறுகிறது.நல்ல காலம் முதலாவது இடம் கொடுக்கவில்லை.2 ம் இடத்தை மைனாவும் 3 ம் இடத்தை தென்மேற்குபருவக்காற்றும் 4 ம் இடம் சிறுத்தையும் இடம்பெறுகிறது.இப்படி பொய்யான தரவரிசையை வெளியிடுவதை விட வெளியிடாமல் இருப்பதே நல்லது.தாங்கள் வெளியிடும் படங்களை முன்னுரிமைப்படுத்தும் இந்த விளம்பரங்களை செய்வதன் மூலம் படம் ஓடும் என பொய்கணக்கு காண்பவர்களுக்கு காவலம் படம் சவுக்கடி கொடுத்து வசூலை அள்ளிக்குவிக்கிறது.

0 comments:

Post a Comment