கலைஞர் கதைவசனத்தில் உருவான இளைஞன் பட பேனருக்கு அனுமதி அளித்து விட்டு, விஜய் நடித்த காவலன் படத்தின் பேனர்களுக்கு போலீசார் தடை போட்டதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வருமா? வராதா? என்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக பொங்கலன்று காவலன் படம் திரைக்கு வந்தது. திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காவலன் படத்தின் டிஜிட்டல் பேனர் தியேட்டர் வாசல்களில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உதயம் தியேட்டர் எதிரில் சுமார் 70 அடி நீளத்திற்கு விஜய் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனரை விஜய் ரசிகர்கள் வைக்க முயன்றபோது போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்திருக்கும் காவலன் படத்தின் பேனருக்கு போலீசார் தடை போட்டதால் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
0 comments:
Post a Comment