
இந்நிலையில் சமீபத்தில் சீமானும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது படத்தில் நடிக்கும் பிற நடிகர் – நடிகைகள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் இச்சந்திப்பின்போது, சீமானிடம் விஜய் ஒரேயொரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாகப்பட்டது, பகலவனை ஆரம்பிச்சுட்டா எங்கயும் பிரேக் இல்லாம முடிச்சிடணும்.
அதனால படம் முடியிற வரைக்கும் நீங்க சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேச வேண்டாம். மீண்டும் ஜெயிலுக்கு போகிற நிலைமையும் வரக் கூடாது, என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கி, ஒருவழியாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் விஜய்யின் வேண்டுகோளில் நியாயம் இருப்பதை உணர்ந்த சீமான், விஜய்யின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.
0 comments:
Post a Comment