Tuesday, January 18, 2011

காவலன் போஸ்டர்கள் கிழிப்பு பொலிஸ் கமிசனரீடம் விஜய் ரசிகர்கள் புகார்

விஜய் நடித்த காவலன் திரைப்படம் பொங்கலுக்கு ரீலீஸானது.இப்படத்துக்காக ரசிகர்கள் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.அசோக்நகரில் உள்ள தியேட்டர்களில் "காவலன் திரையிடப்பட்டுள்ளது.

இதற்காக தியேட்டரை சுற்றி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.பேனர்களையும் சிலர் கிழித்து எறிந்ததாக குற்றம் சாட்டி உள்ளனர்.கட் அவுட் வைக்கவும் அனுமதிக்கவில்லையாம் இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .நேற்று காலை எழும்பூரில் உள்ள போலிஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.விஜய் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது.
குராம்பேட்டை வெற்றி தியேட்டர் எதிரில் "காவலன்" பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதை எதிர்த்து ரசிகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

0 comments:

Post a Comment