விஜய் ரசிகர் தீக்குளிக்க முயற்சி
விஜய் நடித்த காவலன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகியது.பல இடங்களுக்கு படப்பெட்டி தாமதமாக சென்றதால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.பவானியில் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் அத்துடன் ஆத்திரம் அடைந்தனர்.இதனால் ஒருவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினர்.
திருச்சி கலையரங்கம் திரையரங்கில் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் அந்த நோட்டிஸை கிழித்து எறிந்தனர் அதன் பின்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பஸ்கள் மீது கல்லை வீசினர் இதனால் 4 பஸ் வண்டிகள் உடைந்தன.இதனால் போலிஸார் ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.இவர்களில் சில பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சங்கராபுரம் போன்ற பகுதிகளில் படம் பொங்கலன்று ரீலீஸ் ஆகாத படியால் வீதி மறியல் செய்யப்புறப்பட்டனர்.ஆனால் பொலிஸார் சமரசப்படுத்தியதால் இப்போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரையில் தெப்பக்குளம் காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படப்பெட்டி வெளியாக பிந்தியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பஸ் வண்டிக்கு கல் எறிந்தனர் இதனால் இரு பஸ் வண்டியின் கண்ணாடி உடைந்தது.இதனை போல் மதுரை பைஸ்பாஸ் ரோட்டி உள்ள ஒரு தியேட்டரிலும் காவலன் படம் திரையிடப்பட்டுள்ளது.இங்கு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த இருவர் அவ்வழியால் சென்ற பஸ் மீது கல் வீசினர்.
0 comments:
Post a Comment