
சீமானின் இயக்கத்தில் விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் துவங்கவிருக்கிறது.
அரசியல் ரீதியாக விஜய்க்கு வலுவான அடித்தளம் அமைக்கும் படமாக பகலவன் அமையும் என்று கூறப்படுகிறது.தமிழ் உணர்வாளரான விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர் மத்தியில் சரியான அறிமுகம் தரும் படமாக பகலவன் அமையும் என்று சீமான் சமீபத்தில் கூறியிருந்தார்.
படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்துவிட்ட சீமான், படம் குறித்துப் பேச நேற்று விஜய்யைச் சந்தித்தார். அவர்களுடன் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் இருந்தார். இந்த சந்திப்பின்போது, படம் குறித்து மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
0 comments:
Post a Comment