Wednesday, January 19, 2011

விஜயின் காவலன் வெற்றி பெற காரணங்கள் பாகம் 1

விஜய்
விஜய் படத்துக்கு முக்கிய ப்ளஸ்.விஜய் படம் என்றாலே விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.எவ்வளவு தடையை தாண்டி படம் வெளிவந்துள்ளது.விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே தானே கஸ்ரப்பட்டு பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைத்து படத்தை வெளியிட்டார்.
நேர்த்தியான கதை மற்றும் திரைக்கதை
எந்த விதமான இடைச்செருகல்களும் இல்லாத கதை ஓட்டம்.கதையானது மிகத்தெளிவாக செல்கிறது.எந்த விதமான கதாபாத்திரங்களும் தேவையில்லாமல் அமைக்கப்படவில்லை.வில்லனின் நிலைஎன்ன ஏன் ராஜ்கிரனுக்கு காவலனாக வந்து அசினுக்கு காவலனாக செல்கிறார்.ஏன் காவலன் யூனிபோம் பொடுகிறார் ஏன் அதை மாற்றுகிறார் என அனைத்துக்கும் சரியான முறையில்காரணம் சொல்லப்பட்டு மிகப்பிரமாதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் அசின் கூட்டணி
விஜய் அசின் ஏற்கனவே வெற்றிக்கூட்டணியாகவே காணப்பட்டது.அக்கூட்டணி மீண்டும் இணைந்து வெற்றி பெற்றுள்ளது.விஜய் அசினின் கெமிஸ்ரி படத்தில் பிரமாதமாக அமைந்துள்ளது.விஜய் அசின் இணைந்து கெட்ரிக் அடித்துள்ளது.
காமெடி
விஜய் வடிவேலுவின் காமெடி பிரமாதமாக அமைந்துள்ளது.இடைச்செருகளாக காமெடி அமையாமல் கதையோடு இணைந்தவாறு காமெடி அமைந்துள்ளது.வடிவேலுவும் விஜயும் கலக்கும் காமெடி வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறது.
வித்தியாசாகரின் இசை
வித்தியாசாகரின் இசையில் வெளியான பாடல்கள் பிரமாதமாக அமைந்ததுடன் பிண்ணனி இசை அற்புதமாக அமைந்துள்ளது.பல இடங்களில் பிண்ணனி இசையில் வித்தியாசாகர் கைதட்டல் வாங்குகிறார்.பாடல் படமாக்கப்பட்ட விதங்களும் பிரமாதமாக அமைந்துள்ளன.யாரும் எதிர்பாராத அளவுக்கு யாரது யாரது என்ற பாடல் காட்சியாக்கப்பட்டுள்ளது.விஜயின் கியூட்நெக்ஸ் பாடல்களுக்கு பக்கபலமாக அமைந்துள்ளதுடன் கைதட்டலையும் தியேட்டரில் பெறுகிறது.
ஒளிப்பதிவில் பிரமாண்டம்
ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.பாடல்காட்சிகளில் சிறப்பாக கமெரா அமைந்துள்ளது.சண்டை காட்சிகளில் அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
வெற்றிக்கு முக்கியகாரணம் ரசிகர்கள் .அவர்களின் ஒத்துழைப்பால் படம் சூப்பர் கிட் ஆகியுள்ளது.

0 comments:

Post a Comment