![]() |
பெரும்பான்மையான ரசிக மனங்களில் நீங்கா இடம் பெற,படங்களை தேர்வு செய்து நடிக்கும் நாயகன் விஜய்,தற்போது காதல்,ரொமான்ஸ் பக்கம் தாவி,'காவலனாக' அவதரித்துள்ளார்.![]() ஜாலியாக சுற்றிய விஜய்க்கு சொந்தங்கள் 'பாடிகார்டு' போஸ்டிங் போட்டு, ராஜ்கிரணிடம் அனுப்புகிறது.. அங்கே போனதும் ராஜ்கிரணின் எதிரி மகாதேவனின் ஆட்களை அடித்து தூள்கிளப்புகிறார் விஜய். ராஜ்கிரணின் மகள் அசினை கொன்றுவிடுவதாக மகாதேவன் மிரட்ட,அசினுக்கு 'பாடிகார்டாகிறார். பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்ததால் என்னவோ அசினுக்கு மேக்கப் கலரில்,பளபளப்பை கூட்டியிருக்கிறார்கள். மேக்கப் கலைஞருக்கு பாராட்டுக்கள். செக்யூரிட்டி யூனிபார்மிலிருந்து, காலேஜ் கேம்பஸில் விஜய் 'மெட்ரோ செக்சுவல்' பர்சனாலிட்டியாக ஸ்டைல் லுக்கில் குறும்பு கொப்பளிக்க வலம் வருகிறவர், ரொமான்ஸ் காட்சி வரைக்கும் இளமை ரகளையில் துள்ளுகிறார். விஜய்,அசின் இருவரும் செல்போனில் பேசி லவ்வோ லவ்வுன்னு லவ்வுகிறார்கள். பிரைவேட் போனிலிருந்து வரும் காதல் வாய்ஸ், விஜய்யை பிடித்து உலுக்கி,சிலுசிலுக்க வைக்கிறதாம். அசினின் 'தொலை பேசி வழி' காதலுக்கு அவரின் தோழி மித்ரா'டிப்ஸ்' தர சுவாரஸ்யமாக நகர்கிறது.காலேஜ் படிக்கும் அசின்,மித்ரா இருவருக்கும் பாடமெடுக்கும் புத்திசாலி பாடிகார்ட், நெருக்கமாக போன் வாய்ஸ் காதல் பேசும்போதும், காதலியை கண்டுபிடிக்க திணறுவதாக காட்டுவதிலிருந்து அசின் மேல் விஜய்க்கு சந்தேகம் வராமல் போவதுவரை, படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ரசிக்கிறவர்களுக்கு கலகலப்பு தரும். யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். |
0 comments:
Post a Comment