வரிசையாக தோல்வியை கொடுத்தார் என்றும் அவரால் பெரும் நஷ்டம் என்றும் விஜய் மீது விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் புகார் கூறி வருகிறார்கள் அல்லவா? ஆனால் பொங்கலுக்கு வெளிவரப்போகும் படங்களில் அதிக பிரிண்ட் போடப்படுவது விஜய்யின் காவலனுக்குதானாம்.
இவருக்கு அடுத்தபடியாக பிரிண்ட் அதிகம் பெற்று முன்னணியில் இருப்பது கார்த்தியின் சிறுத்தை. சுமார் 300 தியேட்டர்களில் வரவிருக்கிறது சிறுத்தை. காவலன் வரவில்லை என்றால் அந்த தியேட்டரையும் எங்களுக்கே கொடுங்கள் என்கிறார்களாம் இவர்கள்.
இவ்விரு நடிகர்களுக்கு பிறகுதான் வருகிறார் தனுஷ். சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது ஆடுகளம். இப்படம் வெளிவருவதற்கு முன்பே இது அவார்டு படம். அதனால் ரம்பம்தான் என்கிற விமர்சனத்தை பரவ விட்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். கடைசியாக வருகிற நபர் பா.விஜய். சுமார் 100 தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகிறது இளைஞன்.
0 comments:
Post a Comment