இலங்கையில் காவலன் நல்ல தியேட்டர்களை கைப்பற்றி உள்ளது.அத்துடன் இன்னும் பல திரையரங்குகளில் வெளியாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுவரை மன்மதன் அம்பு ஓடிய சினிசிட்டி வசந்தி செல்லம் ஆகிய திரையரங்குகளை காவலன் திரைப்படம் கைப்பற்றியுள்ளது.யாழ்ப்பாணத்தில் விஜய் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் மனோகரா திரையரங்கும் ராஜா திரையரங்குமிடையே ஏற்பட்ட கடுமையான போட்டியின் பின் அதிக விலைக்கு ராஜா திரையரங்கு எடுத்துள்ளது.ராஜா 1 ராஜா 2 என இருதிரையரங்குகளை. இவ் திரையரங்கு கொண்டுள்ளதால் இரு திரையர்ங்குகளிலும் காவலன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவலன் இதுவரை சினிசிட்டி (மருதானை) ராஜா (யாழ்ப்பாணம்) வசந்தி (வவுனியா) நெல்சன் (திருகோணமலை) பிரிமியர் கொன்கொட் (தெகிவளை) எரினா(கட்டுகஸ்தோட்ட) செல்லம் (செங்கலடி) ஆகிய திரையரங்குகளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐங்கரன் நிறுவனம் இலங்கையில் காவலனை வெளியிடுகிறது.இவ் ஐங்கரனின் நிறுவனத்தின் உரிமையாளர் கருணாமூர்த்தியின் தியேட்டராகிய மனோகராவில் காவலன் வெளியாகும் என விளம்பரம் போடப்பட்டிருந்தது.ஆனால் ராஜா திரையரங்கு அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டதல் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.ஆனால் அத்திரையரங்கு சிறுத்தை திரைப்படத்தை வெளியிடுகிறது. யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய நகரங்களில் ஆடுகளம் இளைஞன் வெளியிடும் இடங்கள் உறுதி செய்யப்படவில்லை.ஆடுகளம் சிறுத்தை விரைவில் என திரையரங்குகளின் பெயர் போடாமல் விளம் பரப்படுத்தப்பட்டு வருகின்ற போதும் கலைஞரின் இளைஞனுக்கு ஒரு விளம்பரமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்க்கதாகும்.
0 comments:
Post a Comment