Tuesday, January 11, 2011

சிறந்த ஜோடி விஜய் அசின்

பிரபல ஆங்கில நாளிதலான த கிந்து கொலிவூட்டின் சிறந்த ஜோடி யார் என்ற வாக்கெடுப்பை மேற்கொண்டது.அதில் விஜய் அசின் சிறந்த ஜோடியா தேர்ந்தெடுக்கபட்டது.அவர்களுடன் ஆர்யா நயந்தாராவும் கார்திக் தமனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.விஜய் அசின் நடித்த சிவகாசி போக்கிரி போன்ற படங்கள் வெற்றிபெற்றன.இவர்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் மூன்றாவது படம் காவலன் ஆகும்.இவ் ஜோடி சிறந்த ஜோடி என காவலன் படக்குழுவினரே கூறியுள்ளனர்.
காவலனுக்கு ஆரம்பத்தில் தவறான கருத்துகள் இருந்தாலும் இப்போது காவலன் படத்துக்கு சாதகமான கருத்துகளே வெளிவந்த நிலையில் உள்ளன.காவலன் அதிகளவான திரையரங்குகளில் வெளிவர உள்ளது.காவலன் வெளிநாட்டு உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளது.அமெரிக்கா கனடா சுவிஸ் மலேசியா சிங்கப்பூர் இலங்கை போன்ற நாடுகளில் நல்ல திரையரங்குகள் கிடைத்துள்ளன.
காவலன் விஜய்க்கு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment