இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். அதுவும் தனது சொந்த கதையை இயக்குகிறார். இதுவரை இவரை பற்றி இருக்கிற டப்பிங் டைரக்டர் என்ற இமேஜை இந்த படத்தின் மூலம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற லட்சியமும் இருக்கிறது அவருக்கு. தனது முதல் பட சென்ட்டிமென்ட் படி இந்த படத்தில் நிறைய ரயில் காட்சிகளையும், ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளையும் வைத்திருக்கிறாராம். விஜய்யை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு போனால் செக்யூரிடி பிரச்சனை. பர்மிஷன் பிரச்சனை என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் விசாகப்பட்டினத்தில் சொந்தமாக ஒரு ரயில்வே ஸ்டேஷன் செட்டையை போட சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஒரே மூச்சில் இந்த காட்சிகளை எடுத்துவிட்டாலும் படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் செட்டை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறாராம் அவர்.
|
0 comments:
Post a Comment