இந்தப் படத்துக்கு எந்தக் கட்டும் இல்லாத யு சான்றிதழ் கொடுத்து தயாரிப்பாளர்களையும் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது சென்னை திரைப்பட தணிக்கை பிரிவு. படத்தின் வெற்றிக்கு இதுவே நல்ல அறிகுறி என்கிறார் காவலன் பிஆர்ஓவும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமார்.
இதன் மூலம் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஜனவரி 14-ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் ரொமேஷ் பாபு விநியோகிக்கிறார். வட தமிழகம் முழுவதும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரிலீஸ் செய்வதால், தியேட்டர் பிரச்சினை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. தென் தமிழகத்தில்தான் திரையரங்குகள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது. ஆனால் அதுவும் தீர்ந்துவிடும் என உறுதியுடன் உள்ளது விஜய் தரப்பு.
இதற்கிடையே படத்துக்கான விநியோக ஏற்பாடுகள் இன்று முதல் துவங்குகின்றன. வெளிநாடுகளுக்கும் படத்தின் பிரிண்டுகள் இன்று அனுப்பப்பட உள்ளன. “இந்தப் படத்தின் வெற்றி, விஜய் பற்றி ரகசியக் கூட்டம் போட்ட எல்லோரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத்தான் போகிறது பாருங்கள்”, என்கிறார் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர்.
0 comments:
Post a Comment