“13 வது ஏசியாநெட் ப்லிம் அவாட்ஸ் 2010″ மலையாள சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சில கோலிவுட் நட்சத்திரங்களும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தின் சிறந்த நடிகராக மெகா ஸ்டார் மம்முட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலையாள சினிமாவின் மற்றொரு மெகா ஸ்டாரான மோகன்லால் “கோல்டன் ஸ்டார் அவார்ட்” பிரிவில் விருதை பெறவிருக்கிறார்.
“பாடிகார்ட்” படத்தில் நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாடிகார்ட் படத்தின் தமிழ் பதிப்பான “காவலன்” படத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் அசின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் பொங்கள் விருந்தாக திரையைத் தழுவவுள்ளது “காவலன்”.
மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலரான தமிழ் நடிகர் விருதுக்கு இளைய தளபதி விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் “பாப்புலர் தமிழ் நடிகர்” விருது வாங்கும் முதல் தமிழ் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கேரள ரசிகர்கள் விஜய்க்கு சிலைவைத்து கொண்டாடியது நினைவிருக்கலாம்.
இசைப்பிரிவில் சிறந்த பாடகர்களாக ஹரிஹரன் மற்றும் ஷ்ரேயா கோஷல் ஆகிய கோலிவுட் ஸ்டார்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 9-ம் தேதி அன்று கொச்சியில் நடைபெறவிருக்கிறது.
0 comments:
Post a Comment