குரு-சிஷ்யன் சினிமா வெளியிட்டதில், 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக, “சினிமா பாரடைஸ் சினிமா தயாரிப்பாளர், சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை, தானப்பமுதலி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:மதுரை, தானப்பமுதலி தெருவில், “உதயம் பிக்சர் எனும் பெயரில், திரைப்படங்களை வெளியிட்டு வருகிறேன். சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் சக்தி சிதம்பரம். இவர், “சினிமா பாரடைஸ் எனும் பெயரில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவரும், நானும், சுந்தர் சி நடித்த, “குரு-சிஷ்யன் சினிமாவை மதுரை, ராமநாதபுரத்தில் வெளியிட, 42 லட்சம் ரூபாய் பேசி, கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டோம்.இதன்படி, 2010 மே மாதம் 1ல், மதுரை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு தியேட்டர்களில் குரு-சிஷ்யன் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்படி, 35 லட்சத்து 49 ஆயிரத்து 840 ரூபாய் பாக்கியை சக்தி சிதம்பரம் தர வேண்டும். பணத்தை கொடுக்காமல் தாமதம் செய்தார். 2010 அக்., 25ல், மதுரை, ராமநாதபுரம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் முறையிட்டேன். எனினும், பணத்தை கொடுக்கவில்லை.
மதுரையில் என்னை சந்தித்த சக்தி சிதம்பரம், சங்கத்தில் புகார் செய்ய வேண்டாம் எனவும், கடனுக்காக நடிகர் விஜய் நடித்த, “காவலன் சினிமாவை தருவதாகவும் கூறினார். பின், காவலன் சினிமாவை எனக்கு தராமலும், கடனை தராமல் மோசடி செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், 2010 நவ., 12ல் புகார் கூறினேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment