தமிழ்நாட்டில் விஜய்க்கு மொத்தம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரசிகர் மன்றங்கள். இதில் மாணவர் அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி, சகோதரி அணி, உழைப்பாளர் அணி என்று பெரிய அரசியல் கட்சி அளவுக்கு மன்றங்களை வளர்த்து வைத்திருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். இந்நிலையில் வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது சன் டிவி.இந்த சமயத்தில் ராகுல்காந்தியை விஜய் சந்தித்ததில் சன் டிவியும், ஆளும் திமுக தலைமையும் விஜய் அரசியல் ரீதியாக வளருவதை தடுக்க விரும்பியதாகவும் இதனால் வேட்டைக்காரன் படத்தில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குகளுக்கு கத்தரி வைத்ததோடு, விளம்பரம் மற்றும் புரமோ டிசைன்களில் இளைய தளபதி விஜய் நடிக்கும் என்ற வாசகத்தை இடம்பெறாமல் செய்ததாலும் விஜய் தரப்பில் கோபமுற்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் தயாநிதி மாறன் தனி அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியிருக்கும் நிலையில் தற்போது விஜய் நடித்து கடந்த டிசம்பர் மாதமே வெளியாக இருந்த காவலன் படத்துக்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் தற்போது விநியோகஸ்தர்களையும், தியேட்டர் அதிபர்களையும் சன் டிவி தூண்டி விட்டு வருவதாக அரசியல் வட்டார நிருபர்களிடமிருந்து தகவல் கிடைக்கிறது.
இதன் எதிரொலிப்பாகவே சன் டிவியின் பினாமி விநியோகஸ்தரான ஐயப்பனை தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் தூண்டிவிட்டு, விஜய் படங்களால் இழப்பு என்று பேச வைத்ததாகவும், 75 பிரிண்டுகளுக்கு மேல் போடப்படும் பெரிய படங்களுக்கு கூடுதலாக 15வீத கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதும் விஜயின் காவலன் படத்தை மனதில் வைத்தே என்பதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில்.
இதற்கிடையில் பொங்கலுக்கு காவலன் படம் வெளியீடு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம், விஜயின் காவலன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் வாங்கி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருந்தார். ஆனால் தமிழகத்தின் மொத்த தியேட்டர்களில் 70வீதம் துரைதயாநிதி வசமும், உதயநிதி ஸ்டாலின் வசமும், சன் டிவி வசமும் குத்தகை அடிப்படையில் முடிங்கியிருப்பதால் காவனுக்கு சரியானபடி தியேட்டர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி வந்ததால்தான் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டது என்கிறார்கள்.
இன்னொருபக்கம் காவலன் படத்தை வாங்கிய சக்தி சிதம்பரம் ஏற்கனவே தயாரித்து விநியோகித்த குரு சிஷ்யன் உட்பட அவரது மூன்று மொக்கைப் படங்களை வாங்கி அடிவாங்கிய பல விநியோகஸ்தர்கள் இப்போது நஷ்டத்தை கேட்டு பிரச்சனை பண்ணியதோடு, காவலன் படத்தை குரு சிஷ்யன் நஷ்டத்தை கழித்துக்கொண்டு தங்களுக்கே விலைக்கு தருமாறு கேட்டதாலும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாராம். குறிப்பாக மதுரை விநியோகஸ்தர் பிரபாகரன் என்பவர் குரு சிஷ்யன் நஷ்ட்டத்தை தருமாறு மதுரை மாஜிஸ்ட்ரேட் கோர்ட் படியே ஏறி வழக்கும் தொடர்ந்து விட்டார்.
இப்படி சிக்கல் மேல் சிக்கல் காவலனுக்கு ஏற்பட்டத்தால் டென்ஷனான இளைய தளபதி விஜய், சக்தி சிதம்பரத்திடம் வாங்கிய அட்வான்சை திரும்பக்கொடுத்து, காவலனை திரும்பவும் டேக் ஓவர் செய்து விட்டதாகவும் திட்டமிட்டபடி காவலன் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய ஜெட் வேகத்தில் வேலைகள் நடைபேற்று வருவதாகவும் விஜய் பி.ஆர்.ஓ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது. இது நேற்றைய காலை நிலவரமாக இருந்தபோதிலும் நேற்று மாலை நிலவரம் காவலன் வெளியீட்டை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இதன் பின்னனியில்தான் சன் டிவி விஜய்க்கு எதிரான தனது பொறாமை முகத்தை மீண்டும் காட்டும் விதமாக, தற்போது காவலன் படத்தை வாங்க முன் பணம் கொடுத்த சென்னை, சேலம். செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட ஐந்து மாவட்ட விநியோகஸ்தர்களை தூண்டி விட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வைத்ததாக தகவல் கிடைக்கிறது. இதனால் மொத்தம் 15 கோடிவரை விஜய் தரப்பில் செட்டில் செய்தால்தான் காவலன் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.போகிற போக்கில் பார்த்தால், அசின் நடித்ததுக்கு எதிர்ப்புக் காட்டுங்கள் என்று கலைஞரே அறிக்கை விட்டாலும் விடுவார் போலிருக்கிறது என்று காதுக்குள் கிசு கிசுத்துக் கேலி பண்ணுகிறார்கள்.
விஜய் தாக்குபிடித்து படத்தை வெளியிடுவாரா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் அனல் பறக்க ஒலித்துக் கொண்டிருகிறது.
காவலன் நாளை வெளிவரும் கவலை வேண்டாம்

0 comments:
Post a Comment