
இந்நிலையில், சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்திருக்கிறார் அஜீத். அப்போது விஜய்யிடம், “உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச் சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா” என்று ஒரு நண்பனாக… சக நடிகனாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் அஜீத். இந்த செய்தி இந்தவாரம் நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது.
0 comments:
Post a Comment