Monday, December 20, 2010

விஜயின் 53 வது படம் பகலவன்

விஜயின் காவலன் திரைப்படம் பொங்கலன்று திரைக்கு வருகிறது.அதனை தொடர்ந்து வேலாயுதம் வருடப்பிறப்பிற்கு வருகிறது.இதன் பின் விஜய் நடிக்கும் படம் எது என்பது கேள்வி குறியாக இருந்தது.இப்பொழுது அதற்க்கும் பதில் கிடைத்து விட்டது.விஜயின் 53 வது படம் பகலவன்.இதனை சீமான் இயக்குகிறார்.இதனை சீமானே உறுதி செய்துள்ளார்.கலைப்புலி எஸ் தாணு பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார்.இது மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.விரைவில் உத்தியோக பூர்வ தகவல்களை கலைப்புலி எஸ் தாணு வெளியிட உள்ளார்.கதாநாயகி,இசையமைப்பாளர் மற்றும் ஏனைய தொழில்நுட்பவியலாளர்கள் பற்றிய விடயம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.விரைவில் தொடங்கினால் இவ்வருட தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment