300 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கினார் விஜய். இந்த விழாவிலேயே காவலன் படத்தின் பாடலும் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. மிகவும் எளிமையாக ரசிகர்கள் முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தாலும், இதன் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது.
காவலன் படத்தை வெளியிட விடாமல் எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ, அப்படியெல்லாம் சில சக்திகள் தடுத்து வருகின்றன. ரிலீஸ் செய்யப் போகும் கடைசி நிமிஷம் வரைக்கும் குடைச்சல் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் குடைச்சல் தியேட்டர்கார்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து.
கோவை, ஈரோடு திருப்பூர் பகுதியில்தான் காவலனுக்கு எதிராக பிரச்சனை கிளப்பியிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் இதே பகுதியை சேர்ந்த பிரபல விநியோகஸ்தரும், கோவை நகர விநியோகஸ்தர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நாங்கள் யாரும் காவலனுக்கு எதிராக பிரச்சனை கிளப்பவில்லை. விஜய் இதற்கு முன்பு ஆதி படத்திற்காக பணத்தை திருப்பி கொடுத்தது மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான். சட்டப்படி அல்ல. இந்த முறையும் அவர் அப்படி கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் அக்ரிமென்ட் படி அவர் தரவேண்டியதில்லை. காவலன் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய ஒத்துழைப்போம் என்று கூறியிருக்கிறார்.