Friday, December 31, 2010

சுற்றிச்சுற்றி அடிக்கப்படும் காவலன்

சுற்றிச்சுற்றி அடிக்கப்படும் காவலன்

இதுவரைக்கும் விஜயின் எந்த படமும் இத்தனை சோதனைகளை  சந்தித்திருக்குமா என்பது சந்தேகமே, காவலன் திணறுகிறது, வெளிவரும் செய்திகளால் எல்லோரையும்  தலைசுற்ற வைத்திருக்கிறார் காவலன்.  போன மாதம் ரீலீஸ், மன்மதன் அம்புவுடம் போட்டி, தியேட்டர் உரிமையாளர்களுடன் பிரச்சனை, உதயநிதியுடன் மோதல், எஸ்.ஏ.சி ஜெவை சந்தித்தது, அதிமுக ஆதரவு, ஜனவரியில் தனிக்கட்சி,படம் ஜெயா டீவிக்கு மாறியதாக வந்த செய்தி, பிறகு சன் டீவிக்கு மாறியதாக செய்தி, இதோ இப்போ மீண்டும் வந்த செய்தி..
பொங்கல் அன்று விஜய்யின் “காவலன்” படம் ரிலீஸாக உள்ள நிலையில், படத்தை திரையிட வெறும் 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளனவாம். அதுவும் சுமாரான தியேட்டர்கள் தானாம்.
விஜய்-அசின் நடித்து, டைரக்டர் சித்திக்கின் இயக்த்தில் உருவாகியுள்ள “காவலன்” படத்திற்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன. முதலில் இம்மாதம் டிச., 17ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொங்கலுக்கு இப்படத்தை திரையிட உள்ளனர். ஆனால் இப்போதும் தியேட்டர் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தியேட்டர் அதிபர்கள் உடனான பிரச்சனை தானாம்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தி‌யேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் நஷ்டத்திற்கு நடிகர் பொறுப்பேற்க முடியாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். இதனையடுத்து விஜய் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே இப்படத்தை வாங்கியுள்ள சக்தி சிதம்பரம் தமிழகம் முழுவதும் 400தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார். ஆனால் 70தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதுவும் சுமாரான தியேட்டர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் காவலன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் சிறுத்தை, இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment