Wednesday, December 22, 2010

விஜய், சூர்யா இருவரும் 'ஐகான் பிளேயர்களாக' பங்கேற்க உள்ளார்கள்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் போட்டிகளால் பட வசூல் பாதிப்படைவதாக புலம்பும் சினிமா உலகினர் தற்போது கிரிகெட்டை வைத்து வசூல் பார்க்கும் திட்டத்தில் இறங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.
இதெற்கென 'செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற ஒன்றை ஏற்படுத்தி, அடுத்தடுத்து போட்டிகளை நடத்த உள்ளார்கள்.
இதில் தெலுங்கு, தமிழ்,இந்தி, கன்னடம் ஆகிய பட உலகைசேர்ந்த ஹிரோக்கள் அணி வகுத்து மோதுகிறார்கள். ஆறு 'லீக்' போட்டிகளும், பரபரப்பான இறுதி போட்டியும் நடக்க உள்ளது.
ஹிரோக்களை சியர் கேர்ள்ஸ் மினிமம் உடைகளில் ஆடி உற்சாகப்படுத்த போகிறார்கள். கேரளாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் முடிவெடுத்தால் மலையாள சினிமா கிரிக்கெட் டீமும் இந்த 'சி சி எல்' போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாம்.
நான்கு சினிமா உலகின் கிரிக்கெட் அணிக்கும் வித்தியாசமாக, 'டுவென்டி-டுவென்டி' மேட்ச் பாணியில் பெயர்களை சூட்டியுள்ளார்கள்.வரும் ஜனவரி மாதம் போட்டிகள் நடக்க உள்ளன.
இந்த போட்டியினை நடத்த சினிமாக்காரர்களுடன் பிஸ்னஸ் புள்ளிகள் கை கோர்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடும் சிம்பு, ஜெயம் ரவி, ஜீவா, ரமேஸ், சாந்தனு, அருண் விஜய், ஹம்சவர்தன், ரமணா, அப்பாஸ், விக்ராந்த், கார்த்தி ஆகிய ஹிரோக்களை மேலும் சரத் உற்சாகப்படுத்தியுள்ளார்.
'தமிழ் சினிமாவில்' ஹீரோக்கள் கிரிக்கெட் பிளேயர்களாக கலக்கியிருக்கிறார்கள். அணி பலமான அணியாக உள்ளது. இந்த அணியைக்கண்டு மற்ற அணிகள் மிரள்கின்றன.
சீரியசாக விளையாடி ரசிகர்களை மகிழ்விக்க போகிறோம். விஜய், சூர்யா இருவரும் 'ஐகான் பிளேயர்களாக' பங்கேற்க உள்ளார்கள். போட்டி சம்பந்தப்பட்ட மற்ற விசயங்களையும் வரும் நாட்களில் முடிவெடுத்து, அறிவிக்கப்போகிறோம்.
சினிமா உலகினர் இடையே சகோதரதத்துவத்தை இப்போட்டிகள் உருவாக்கும். சமூக நலனிற்கும் பங்களிக்கும். நானும் டீமில் முக்கிய பிளேயர்தான். கிரிக்கெட் ஹீரோக்களின் உடல்தகுதி, விளையாட்டு நுணுக்கம் பற்றியும் கலந்து பேச உள்ளோம்.
நமது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் விளையாடும் ஹீரோக்களை சூப்பர் ஸ்டார் 'ரஜினி உற்சாகப்படுத்துகிறார்' என்று சரத்குமார் பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment