
சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் அவருக்கு திடீரென்று முளைத்துள்ள பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு பரிகாரங்கள் மற்றும் பூஜைகளிலும் விஜய் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரம் அரசியல் ரீதியான பாதுகாப்பிலும் கவனமாக உள்ளார்.
தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசிக்கும் விஜய், தன் தந்தையுடன் குடியிருந்த பழைய வீட்டை இப்போது விற்பனை செய்துவிட்டார். இதனை வாங்கியிருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. முதலில் விஜய் ஆண்டன இதை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இங்குதான் தனது இசைப் பதிவு கூடத்தை அமைத்துள்ளார் ஆண்டனி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகில் அடையாளம் காட்டப்பட்டவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தந்தை நேற்று முன்தினம் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விரைவில் விஜய்யும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment