Saturday, December 18, 2010

விஜய் எனக்கு சூப்பர் ஃப்ரெண்ட் : அசின் பேட்டி

தாஜ் ஹோட்டல்... அறை எண் 506... "வாங்க சார்!" என்று வரவேற்கிறது தென்றல் குரல்... அசின்!

ஷூட்டிங், மீட்டிங், டப்பிங் என்று களைப்பு, சோர்வு அனைத்தையும் மீறி மினுமினுக்கின்றன கண்கள். முகம் பார்த்து கனிவாகப் பேசத் துவங்குகிறார் அசின்!

"தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?"

"யெஸ்! 'நல்ல படமா செய்யலாம்'னு காத்திருந்ததுதான் காரணம். நடுவே, இந்தி கமிட்மென்ட்ஸ். எல்லாத்தையும் பார்த்துக்கணும் இல்லையா!

நான் கொஞ்சம் நல்ல கதையான்னு பார்ப்பேன். நமக்கு ஸ்கோப் இருக்குமான்னு சிந்திப்பேன். ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் எல்லாம் பார்த்துதான் ஒரு படம் செய்ய முடியும். 'இந்தப் பொண்ணு நடிச்சா நம்பி வரலாம்'னு மக்கள் சொல்லணும். அதனால, அப்பப்போதான் தமிழுக்கு வருவேன்னு சொல்லலை. நல்ல வேஷம் கிடைச்சா, எப்பவும் நான் தமிழ்ப் படத்தில் நடிக்கத் தயார்!"

"அது என்ன, தமிழ்ல விஜய்கூட நடிக்க மட்டும் உங்களுக்கு நேரம் கிடைக்குது?" 

" 'சிவகாசி', 'போக்கிரி'ன்னு ரெண்டு படங்கள்தான் அவர்கூட நடிச்சிருக்கேன். விஜய் எனக்கு சூப்பர் ஃப்ரெண்ட். அவர் மனைவி சங்கீதா, குழந்தைகள், அப்பா, அம்மா எல்லோரையும் எனக்குத் தெரியும். தெரிஞ்சவங்களோட, நம்மை நல்லாப் புரிஞ்சவங்களோட பழகுவதில் நமக்கு ஒரு நல்ல ஃபீல் கிடைக்குமே... அதுதான்!

சூர்யா, விக்ரம் என வாய்ப்பு கிடைக்கும்போது எல்லா ஹீரோக்களுடனும் நடிச்சுட்டுதான் இருக்கேன். கால்ஷீட், கதை செட் ஆச்சுன்னா, யார் கூடவும் நடிப்பேன்.

இப்போகூட 'காவலன்' படம் செம ஜாலியான அனுபவம். நான் டைரக்டர் சித்திக் இயக்கத்துக்கு ரசிகை. காமெடியோடு கதை சொல்வதில் இன்னிக்கு மலையாளத்தில் அவர் முக்கியமான ஆள். விஜய் ஹீரோ, சித்திக் டைரக்டர், 'பாடிகார்ட்' கதை. நானே பல தடவை பார்த்து ரசித்த படம். இந்த வாய்ப்பை மறுக்க முடியுமா?"

"சல்மான் கூட இந்தி 'ரெடி' எப்படி வந்திருக்கு?"


"சல்மான் இப்ப இந்தியில் டாப் மோஸ்ட் ஆக்டர். இரண்டே வெற்றிகளில் ரொம்ப உயரத்துக்குப் போயிட்டார். 'ரெடி' படத்தில் எனக்கு அவர்கூட சரி சமமா மல்லுக்கு நிற்கிற கேரக்டர். ரொம்ப சூப்பரா வந்திருக்கு. உங்களைவிட, ஆர்வமா நானே அந்தப் பட ரிலீஸை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!"

"இங்கே ஸ்ரேயாவும், த்ரிஷாவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு அப்படி எல்லாம் யாரும் இல்லையா?"

"என்னுடன் யாருமே சேர்ந்து நடிச்சது இல்லையே? எங்கேயாவது, ஏர்போர்ட், நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொண்டால் 'ஹலோ... ஹவ் ஆர் யூ?' அவ்வளவுதான். நேரமே இல்லாமல் இருக்கேன். கொஞ்சம் லீவு கிடைச்சா, உடனே சொந்த ஊருக்குப் போய் அம்மா மடியில் படுத்துக்குவேன். இப்பக்கூட, த்ரிஷாவுக்கு போன் பண்ணி, 'விண்ணைத் தாண்டி வருவாயா' பிரமாதமாப் பண்ணி இருக்கீங்கன்னு விஷ் பண்ணினேன்!"

"உங்களுக்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா' பிடிச்சு இருந்ததா?" 

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்தப் படத்தில் நான் நடிச்சு இருக்க வேண்டியது. என்னிடம் கௌதம் கதை சொன்னார். 'கிறிஸ்டியன் மலையாளி கேர்ள்' இன்ஸ்பிரேஷன்கூட என்னிடம் இருந்து வந்ததுதானாம். பாருங்க, அப்பா பெயர்கூட ஜோசப்னு வெச்சு இருக்கார். ஏதேதோ காரணங்களால் தட்டிப்போயிருச்சு வாய்ப்பு. என்னிடம் சொன்னபடியே ரொம்ப அழகா எடுத்திருக்கார் கௌதம். ஒரு படத்தை சின்னக் கதையோடு அவர் கொண்டுபோகிற விதம் பிடிச்சு இருக்கு!"

"அப்படி ஒரு காதல்... கல்யாணம்?"

"என்னங்க இப்போ அவசரம்? இன்னும் கொஞ்சம் நடிப்போம். 'அசின் அருமையான ஆர்ட்டிஸ்ட்'னு இன்னும் நல்ல பேர் வாங்கிட்டு, அப்புறமா 'பை பை' சொல்லுவோமே. சரியா?"- தலை சாய்த்துக் கேட்கிறார் அசின். 

0 comments:

Post a Comment