
தன் “காவலன்” படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் “3 இடியட்ஸ்” படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.
சரி, விஜய் “3 இடியட்ஸ்” படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன ? விஜய் அதிமுக அணிக்கு சாதகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் மேலிடத்தை அதிர வைத்திருப்பதால், அவர் நடிக்கும் காவலன் படத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்யவும் தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது…

ஆனால் விஜய் தரப்போ, “3 இடியட்ஸ்” படத்திற்கு கால்ஷீட் பிரச்சனைகள் இருந்தது, அதனால்தான் ஷங்கர் படத்தில் இருந்து விஜய் விலகிக்கொண்டார் என்று சொல்கிறது. இம்மாதம் 17-ம் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

இதில் இன்னொரு சூடான செய்தி என்னவென்றால் தற்போது ஆளும்தரப்புக்கு இணக்கமாக இருக்கும் சூர்யாவிடம் “3 இடியட்ஸ்” படத்திற்காக பேசிவிட்டாராம் ஷங்கர்…!
0 comments:
Post a Comment