இது பழிவாங்கப்பட்டவர்களின் கதை என்று சப் டைட்டில் கொடுக்காமல் இருந்தால் சரி. மற்றபடி இரண்டு கைகள் நான்கானால்... என்ற ரேஞ்சில் கை கோர்த்துவிட்டார்கள் சீமானும், விஜய்யும். தாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதுதான் நேற்றுவரை உலவிய செய்தி. இன்று அதில் இஞ்ச் அளவுக்கு ஒரு மாற்றம்!கோபம் என்று தலைப்பு வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளேயிருந்தவர் சீமான். வெளியே வந்த பின்பும் முன்னிலும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். என் மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்பேன் என்ற தனது வாதத்தில் இப்போதும் மாற்றமில்லை என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். தன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காததால் குமுறிக் கொண்டிருக்கிறார் விஜய். எனவே 'சீமான் இயக்கத்தில் விஜய்யின் கோபம்' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம் இருவரும். மாற்றம் இதில் மட்டும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயத்திலும் இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அது? முன்பு இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தாணு என்ன காரணத்தாலோ கை மாற்றிவிட துடிக்கிறாராம். தாணு போனாலும் கோபத்தை விடக் கூடாது என்ற முடிவிலிருக்கிறார்களாம் சீமானும், விஜய்யும். |
சரி. மற்றபடி இரண்டு கைகள் நான்கானால்... என்ற ரேஞ்சில் கை கோர்த்துவிட்டார்கள் சீமானும், விஜய்யும். தாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதுதான் நேற்றுவரை உலவிய செய்தி. இன்று அதில் இஞ்ச் அளவுக்கு ஒரு மாற்றம்!





1 comments:
Thanu Don't change your idea.vijay is rocks.
Post a Comment