மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை.தயாநிதி-அனுஷ்கா திருமணத்திற்கு ![]() அந்த அஜீத்தே இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால் அஜீத்துக்கு இணையாக எப்போதும் பேசப்படும் விஜய் மட்டும் ஆப்சென்ட்! ஏன் அவர் போகவில்லை என்று ரசிகர்களும் கட்சிக்காரர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வேலாயுதம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறாராம் விஜய். அதனால்தான் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள் விஜய் தரப்பில். இதற்கிடையில் பல நாட்களாக விஜய் நடத்தி வந்த அரசியல் கட்சி ஒத்திகைக்கு இறுதி வடிவம் கொடுக்கப் போகிறாராம் விரைவில். தனது ரசிகர்களை சென்னையில் திரட்டி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். கடந்த மாதம் ஒரு திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த விஜய், அவரது காலில் விழுந்து வணங்கியதுடன் மதுரை, திருச்சியில் உங்க கட்சி கூட்டம் பார்த்து மிரண்டு போனேன் என்றும் பாராட்டியிருந்தார். இந்த ஆப்சென்ட்டுக்கும் அந்த சம்பவத்திற்கும் முடுச்சு போடுகிறார்கள் இப்போது. |
0 comments:
Post a Comment