Saturday, November 13, 2010

விஜய், அஜித் ரகசிய டீல்!

பெருமழையில் சிக்கிய நத்தை போலாகிவிட்டார்கள் இரண்டு ஹீரோக்கள். தேர்தல் நெருங்க நெருங்க இழுப்பு படலம் ஓவராகிவிட்டதுதான் காரணம். சும்மாயிருந்தாலும், சுரண்டிட்டு போவுதாம் விதிங்கிற மாதிரி, மதுரை மாநாட்டில் இந்த இரண்டு ஹீரோக்களை பற்றியும் ஜெ. பேசிய கருத்துக்கள்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று ஃபீல் பண்ணுகிறார்களாம் அவர்கள்.
அந்த பேச்சை பொய்யாக்கும் விதத்தில் இருவரிடமும் ஆதரவு கேட்டு தூது அனுப்புகிறதாம் ஆளுங்கட்சி. தான் பேசியதை இன்னும் உறுதியாக்கிவிடலாம் என்று முன்னாள் ஆளுங்கட்சியும் தூது அனுப்புகிறதாம். இவ்விரு கட்சிகளுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு அல்லாடும் இவர்களுக்கு டில்லியில் இருந்தும் அவ்வப்போது சமிக்ஞை வர, பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்கள் இருவரும். நேரில் சந்திக்காவிட்டாலும், அடிக்கடி போனில் பேசிக் கொள்ளும் இருவரும், எலக்ஷன் நேரத்துல எங்கயாவது வெளிநாட்டுக்கு போய்விடலாம் என்று பேசி வைத்திருக்கிறார்களாம்.
அந்த நேரத்தில் ஷூட்டிங், குடும்ப சுற்றுலா, அல்லது உடல்நிலையை காரணம் காட்டியாவது இருவரும் உள்ளூரில் இருக்கப் போவதில்லையாம். தேர்தல் முடிந்தபின் சைலண்ட்டாக வாழ்த்து சொல்ல மட்டும் வந்து சேரும் திட்டம் வைத்திருக்கிறார்களாம். அந்த ரெண்டு பேரும் யாருன்னு உங்களுக்கு தெரியும் என்றாலும், சொல்லிவிடுவதுதானே முறை ?

0 comments:

Post a Comment