
ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர். இந்தியில் ரிலீசான ஓம்சாந்தி ஓம் படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது. அந்த பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்தில் காட்சிகளை எடுக்கின்றனர்.
ரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன் சேர்ந்து கதாநாயகர்கள் நடனம் ஆடு வதுபோல் இந்த காட்சி வருகிறது. இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஜீவாவும் அவர்களுடன் ஆடுகிறார். கதாநாயகிகள் தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா ஆகியோரும் இப்பாடலில் ஆடுகிறார்கள். ஜெயம்ரவி ஆடும் காட்சியை படமாக்கி விட்டதாக இயக்குனர் கே.வி.ஆனந்த கூறினார்.
இது பற்றி ஜீவா :

ஆர்யா அவன் இவன் படப்பிடிப்பில் இருக்கிறார். தனுசும் பிசியாக இருக்கிறார். சிறிது நேரம் வந்து ஆடிவிட்டு போகும்படி கேட்டுள்ளோம். தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா போன்றோருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். அனுப்பி அழைத்துள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment